2010-02-17 15:23:30

அமெரிக்காவிலுள்ள கத்தோலிக்க மருத்துவமனை ஒன்று  இனி கத்தோலிக்க மருத்துவமனை என அழைக்கப்பட முடியாது - ஆயர் Robert Vasa 


பிப்.17,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oregon மாநிலத்திலுள்ள Baker மறைமாவட்டத்தில் பல ஆண்டுகளாய் இயங்கி வரும் ஒரு கத்தோலிக்க மருத்துவமனை இனி கத்தோலிக்க மருத்துவமனை என அழைக்கப்பட முடியாது என்றும் அம்மருத்துவமனையுடனான மறைமாவட்ட உறவுகளை நிறுத்திக் கொள்வதாகவும் அம்மறைமாவட்ட ஆயர் Robert Vasa கூறினார்.
92 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட புனித Charles மருத்துவ மையம் (St Charles  Medical Centre) கடந்த சில ஆண்டுகளாய் பெண்களுக்கு செய்யும் ஒரு சில மருத்துவ முறைகள் ஏறத்தாழ கருகலைப்புக்கு சமமான முயற்சிகளாக இருந்து வந்துள்ளது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதென ஆயர் Vasa கூறினார்.இந்த முடிவை அடுத்து அந்த மருத்துவமனையில் இனி திருப்பலிகள் நடைபெறாது என்றும், அந்த மருத்துவ மனையின் மேலுள்ள சிலுவை அகற்றப்பட மாட்டது என்றும் ஆயர் மேலும் கூறினார். கத்தோலிக்க ஆயர் பேரவையின் பரிந்துரைகளையும், கத்தோலிக்கப் படிப்பினைகளையும் இந்த மருத்துவ மனையை நிர்வாகம் செய்பவர்கள் விரைவில் மீண்டும் உணர்ந்து பின்பற்றுவார்கள் என்று தான் நம்புவதாக ஆயர் Vasa கூறினார்.







All the contents on this site are copyrighted ©.