2010-02-16 17:06:12

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்-பூனே ஆயர்


பிப்.16,2010 பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென பூனே ஆயர் தாமஸ் தாப்ரே அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று இடம் பெற்ற பூனேயின் கோரேகான் பூங்காவிலுள்ள புகழ் பெற்ற ஜெர்மன் உணவு விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் அறுபது பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 12 பேர் வெளிநாட்டவர்.

இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதால், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத சமுதாயத்தைச் சமைப்பதற்கு அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டியது அவசியமாகிறது என்று பூனே ஆயர் மேலும் கூறினார்.

அமைதி, நீதி, மாண்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதில் அனைத்து மதங்களின் ஒத்துழைப்பை வலியுறுத்திய ஆயர் தாப்ரே, இத்தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கானத் தனது அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.