2010-02-16 17:06:00

நாடோடி மக்களின் நலவாழ்வுக்கென இந்திய தலத் திருச்சபை உதவ வேண்டியது - போபால் பேராயர் லியோ கொர்னேலியோ


பிப்.16,2010 கால் நடைகளை நம்பி வாழும் நாடோடி மக்களின் நலவாழ்வுக்கென இந்திய தலத் திருச்சபை தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்ற உள்ளதாக அறிவித்தார் போபால் பேராயர் Leo Cornelio.

தொழிற்சாலைகளின் வளர்ச்சியினாலும், கிராமங்கள் நகரங்களாகி வருவதாலும், இயற்கை வாழ்வுக்கான பகுதிகள் சுருங்கி வருதல் மற்றும் காடுகள் பயன்பாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் நாடோடி மக்களின் வாழ்வு துன்பம் நிறைந்ததாக மாறி வருகிறது என்ற பேராயர், இவர்களுக்கு உதவ வேண்டியது திருச்சபையின் கடமையாகிறது என்றார்.

மாண்பற்ற ஒரு வாழ்வுக்குத் தள்ளப்பட்டுள்ள இம்மக்களுக்கு கல்வி மூலம் விடுதலை வழங்க தலத்திருச்ச்சபை திட்டமிட்டுள்ளது என நாடோடி மக்களுக்கான திருச்சபையின் இரு நாள் கருத்தரங்கின் இறுதியில் கூறினார் இந்திய நாடோடி மக்களுக்கான மேய்ப்புப்பணி அவையின் தலைவர் பேராயர் Cornelio.

சில தனியார் நிறுவனங்களின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவின் 100 கோடி மக்கள் தொகையில் 0.7 விழுக்காட்டினர் நாடோடி இனத்தவர். இவர்களில் பெரும்பாலும் வட இந்திய மாநிலங்களில் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.