2010-02-16 17:05:39

அமெரிக்காவில் குருக்களின் நிலை குறித்து ஆயர் பிரதிநிதிகள் கலந்துரையாடல்


பிப்.16,2010 அமெரிக்கக் கண்டத்தில் குருக்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து அக்கண்டத்தின் ஆயர் பிரதிநிதிகள் இணைந்து அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இலத்தீன் அமெரிக்காவின் எட்டு ஆயர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐந்து ஆயர்கள் மற்றும் கானடாவின் ஆறு ஆயர்கள் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் குருக்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் ஹெய்ட்டி நாட்டின் பாதிப்புக்கள் மற்றும் அந்நாட்டிற்கான உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

1967ம் ஆண்டுமுதல் அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களும் ஒன்றுகூடி விவாதித்து வருவதில் அண்மைக் காலங்களில் குடும்பம், சமூகத் தொடர்பு சாதனங்கள், புதிய நற்செய்தி அறிவிப்பு, மக்களின் இன்றைய மதச்சார்பற்ற நிலை, இறைவனோடு தனிப்பட்ட தொடர்பு போன்ற தலைப்புக்களின்கீழ் ஆராயப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.