2010-02-15 16:41:25

இந்தோனேசியாவில் கிறிஸ்தவ சபைகள் மீதான தாக்குதல்கள் குறித்து அரசு பாராமுகம்


பிப்.15,2010 இந்தோனேசியாவில் கிறிஸ்தவ சபைகள் மீதான தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு அரசு பாராமுகமாய் இருப்பதாக இந்தோனேசியாவின் மதம் மற்றும் அமைதிக்கான அவை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

சனவரி மாதத்தில் மட்டும் மதங்களுக்கு எதிரான 20 வன்முறை தாக்குதல்கள் இடம் பெற்றதாகவும் இது குறித்து அரசோ, பாதுகாப்புத் துறையினரோ எவ்விதக் கவலையுமின்றி இருப்பதால், தாக்குதலில் ஈடுபடுவோர் புது ஊக்கம் பெற்றுள்ளார்கள் என்றார் மதம் மற்றும் அமைதிக்கான அவைத் தலைவர் Sisti Musdah Mulia.

ஒவ்வொருவரும் தங்கள் மதத்தைக் குறித்து சரியாகப் புரிந்துகொண்டு, தேசிய மதிப்பீடுகளுக்கு என தங்களை அர்ப்பணித்துக் கொண்டாலொழிய இதற்கு நீதியான தீர்வு காண முடியாது என்றார் இஸ்லாமியரான இவ்வவைத்தலைவர் Mulia.

Jakarta கிறிஸ்தவ தகவல் தொடர்பு மையம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய அவர் கிறிஸ்தவக் கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, முற்சார்பின்றி நீதி வழங்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.