2010-02-15 14:40:57

அயர்லாந்து ஆயர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு.


பிப்ரவரி. 15. அயர்லாந்து திருச்சபையில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்களையொட்டி இத்திங்கள் முழுவதும் திருத்தந்தை 16ம் பெனெடிக்டை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடலில் ஈடுபட்டனர் அந்நாட்டின் 24 ஆயர்களும். திருத்தந்தையுடன் ஆன இச்சந்திப்பு பாவத்திற்காக மனம் வருந்துதல், ஒப்புரவு மற்றும் புதுப்பித்தலை உள்ளடக்கிய பயணமாக இருக்கும் என்றார் Armagh பேராயர் Sean Brady.

அயர்லாந்து ஆயர்களுடன் இணைந்து இத்திங்கள் காலை வத்திக்கானில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருடப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, உள்ளிருந்து வரும் சோதனைகள் துன்பம் நிறைந்ததாயும் அவமானத்தை தருவதாகவும் இருப்பினும் அவைகளை ஆற்றியவர் தன் பாவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும், விசுவாசத்தின் ஒளியின் உதவியுடனும் புனிதத்துவத்திற்கான காரணியாக அவை அமையலாம் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக அயர்லாந்து திருச்சபையில் இளஞ்சிறார்கள், சில குருக்களால் பாலியல் முறையில் தவறாக நடத்தப்பட்டது குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அந்நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து வருகிறார் பாப்பிறை 16ம் பெனெடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.