2010-02-13 16:16:08

வத்திக்கான் இரகசிய ஆவணக் காப்பகத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய பல ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்குத் திருப்பீடம் திட்டம்


பிப்.13 2010 வத்திக்கான் இரகசிய ஆவணக் காப்பகத்திலிருந்து இரண்டாம் உலகப் போர் தொடர்புடைய பல ஆவணங்களை இலவசமாக இணையதளத்தில் வெளியிடுவதற்குத் திருப்பீடம் திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதங்களுக்கிடையேயான பிளவுகளைச் சரிப்படுத்துவதற்காகச் செயல்பட்டு வரும் Pave the Way Foundation என்ற அமைப்பின் வேண்டுகோளின் பேரிலும் இம்முயற்சி எடுக்கப்படுவதாக, அவ்வமைப்பை உருவாக்கியவரும் அதன் தலைவருமான Gary Krupp தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது, மக்களின் துன்பங்களைக் களைவதற்குத் திருத்தந்தை 12ம் பத்திநாதர் எடுத்த முயற்சிகளுக்குத் தெளிவான சான்றுகளை இந்த ஆவணங்கள் தரும் என்ற தனது நம்பிக்கையயும் இவர் குறிப்பிட்டுள்ளார்
1939ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் 1945ம் ஆண்டு மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலம் தொடர்புடைய சுமார் 5125 விளக்கங்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களை வெளியிடுவதற்கு இவ்வமைப்பு பரிந்துரை செய்திருப்பதாக குரூப், ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.