2010-02-13 16:16:22

அமெரிக்காவில் இளம் கத்தோலிக்கர், வாழ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது


பிப்.13,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் இளம் கத்தோலிக்கர், வாழ்வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவிப்பதாகவும் அந்நாட்டில் திருச்சபை நிறுவனம் ஒன்று எடுத்த ஆய்வு தெரிவிக்கின்றது.

Knights of Columbus என்ற பக்த அமைப்பின் சார்பில் Marist நிறுவனம் நடத்திய ஆய்வில், 65 விழுக்காட்டு இளவயது கத்தோலிக்கர் தங்களது மதத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாழ 85 விழுக்காட்டினர் கடவுளில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.