2010-02-12 16:57:05

நாளும் ஒரு நல்லெண்ணம்.. பிப்ரவரி 13.


RealAudioMP3 ஆள்மாறாட்டம் என்பது அண்மைக்காலங்களில் அடிக்கடி பத்திரிகைகளில் வருவது ஆச்சரியமாக உள்ளது.

கோவையின் ஆலாந்துறை காவல்துறையினரே நீதிமன்றத்தில் வேறு ஒருவரை குற்றவாளியாகக் காட்டி, உண்மைக்குற்றவாளியை தப்பிக்க வைத்ததாகச் செய்தி.

தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ததாகச் செய்திகள்.

தேர்தலில் ஆள்மாறாட்ட வாக்குப் பதிவுச் செய்திகள்.

நான் பணத்தைத் தொலைத்துவிட்டேன், எனக்கு உடனே பணம் அனுப்புங்கள் என யாராவதுஒருவர் பெயரில் அவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மினஞ்சல் அனுப்பும் செய்திகள்.

உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என ஏமாற்றும் செய்திகள்.

இப்படி எத்தனையோ மாறாட்டங்கள் தினசரி நடக்கின்றன.

இதே பின்னணியில் இன்றைய அரசியல்வாதிகளை கொஞ்சம் நோக்குங்கள்.

அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த பின்னர் அனைத்தையும் மறந்துவிட்டு ஆளே மாறிப் போவதை என்னென்பது?








All the contents on this site are copyrighted ©.