2010-02-12 17:00:31

உலகின் மிகப்பழமையான கிறிஸ்தவ அடைபட்ட துறவுமடம், தற்சமயம் பயணிகளுக்குத் திறந்து விடப்படடுள்ளது


பிப்.12,2010 உலகின் மிகப்பழமையான கிறிஸ்தவ அடைபட்ட துறவுமடம், எண்பது வருட புதுப்பித்தலுக்குப் பின்னர் தற்சமயம் திருப்பயணிகளுக்கெனத் திறந்து விடப்படடுள்ளது.

புனித வனத்து அந்தோணியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கி.பி.356ம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்ட காப்டிக்ரீதி ஆர்த்தாடாக்ஸ் துறவு மடம், எகிப்து நாட்டில் செங்கடல் மலைப்பகுதி அடிவாரத்தில் Al-Zaafarana. என்ற நகருக்கருகில் அமைந்துள்ளது.

ஒரு கோடியே 45 இலட்சம் டாலர் செலவில் புதுப்பிக்கப்பட்ட இந்த வனத்து அந்தோணியார் துறவுமடம், கடந்த வாரத்தில் திருப்பயணிகளுக்கெனத் திறந்து விடப்படடது. இதில் துறவிகளும் வாழ்கின்றனர்.

இத்துறவு மடத்திலுள்ள 1700க்கும் மேற்பட்ட பழங்காலக் கையெழுத்துப் பிரதிகளும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துறவுமடம் 1600க்கும் மேற்பட்ட ஆண்டு பழமையுடையது.








All the contents on this site are copyrighted ©.