2010-02-12 17:00:13

இலங்கையில் மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம்- இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர்


பிப்.12,2010 இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கார்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ள வெய்ஸ், இலங்கை அரசை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான தனது 14 வருடப் பணியில் இருந்தும் பதவி விலகியுள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள கார்டன் வெய்ஸ் இலங்கை மோதல் குறித்து புத்தகமொன்றை எழுதி வருகிறார்.

சகல விதமான ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலைகளைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கமுடையவையாகவும் அவை காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.