2010-02-11 16:10:06

AIDS நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளது சலேசிய நிறுவனம்


பிப்.11,2010 'alaihal MIDEA' என்ற சலேசிய நிறுவனம் AIDS நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூன்று குறும்படங்களை வெளியிட்டுள்ளனர். வாழ்வு, அன்பு, நம்பிக்கை என்ற மூன்று தலைப்புகளோடு வெளியிடப்பட்டுள்ள இந்த குறும்படங்கள் தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் ஸ்டாலினுடைய மகனின் ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டுள்ளதென செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.

தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனர்களால் இப்படங்கள் இயக்கப்பட்டுள்ளன என்றும், Moserbaer என்ற பெரும் Video நிறுவனம் உட்பட பல சமுதாய அக்கறை உள்ள பல நிறுவனங்களின் உதவியுடன் இக்குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.