2010-02-10 15:55:14

புகழ்பெற்ற பனி Hockey விளையாட்டு வீரரும், குருமட மாணவரும் குளிர்கால ஒலிம்பிக் தீப்பந்தத்தை எடுத்துச் செல்வர்


பிப்.10,2010 இவ்வெள்ளியன்று கனடாவின் Vancouver ல் ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின் போது ஏற்றப்படும் விளக்கைச் சுமந்து செல்லும் பெருமை  Noel Oco என்ற கத்தோலிக்க குருமட மாணவருக்குக் கிடைத்துள்ளது.ஒலிம்பிக்  போட்டிகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் முதல் இடம் பெற்ற Noel Oco ஒலிம்பிக் போட்டிகளுக்காக கிரேக்க நாட்டிலிருந்து கொண்டுவரப்படும் தீப்பந்தத்தைப் பற்றி தன் கட்டுரையில் குறிப்பிட்டு, இந்த தீப்பந்தம் நம் உள்ளங்களில் ஒளிரும் பல நல்ல மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறி என்பதை தன் கட்டுரையில் கூறியுள்ளதாக சொன்னார். இந்த தீப்பந்தத்தைப் புகழ்பெற்ற பனி Hockey விளையாட்டு வீரரும், 2004ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்று கத்தோலிக்கராய் மாறிய Tevor Lindenம், குருமட மாணவர் Noel Oco வும் Vancouver நகர வீதிகளில் இப்புதனன்று எடுத்துச் செல்வர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.