2010-02-10 15:41:14

பிப்ரவரி 11- நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3 காலம் மாறலாம்.

கலாச்சாரங்கள் மாறலாம்.

கனவுகளும், கண்ணோட்டங்களும் மாறலாம்.

மாறாமல், மலையாய் நிலைத்திருப்பது தாயன்பே.

குழந்தைகளின் வருங்காலத்திற்காய் கைரேகைகள் தேயும் வரை உழைப்பவளும், ஒவ்வோர் உயர்விலும் தாங்கி நிற்பவளும், ஒவ்வொரு சரிவிலும் தட்டிக் கொடுப்பவளும் அத்தெய்வமே.

நபிகள் நாயகமும், “தாயின் பாதங்கள் கீழ்தான் சுவர்க்கம்” என்றார்.

“ஒரு தாயின் உழைப்பு தான் குழந்தையின் எதிர்காலம்” என்பார் நெப்போலியன் போனபார்ட்.

இதையெல்லாம் தாண்டிப்போய், தன் அனுபவ வார்த்தைகளைத் தருகிறார், ஆபிரகாம் லிங்கன்: “என் தாயின் பிரார்த்தனைகள் என்னைப் பின் தொடர்கின்றன. அவை என் வாழ்வோடு பயணிக்கின்றன.” என்று.

இவ்வியாழனன்று லூர்து அன்னைத் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம்.

தீரா நோய்க்கும் தாராளமாய் குணம் வழங்கும் அவ்வற்புத அன்னையிடம், நம் குறைகள் அனைத்தும் குணப்படுத்தப்பட உதவுமாறு வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.