2010-02-09 16:06:34

பிப்ரவரி, 10 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3 IKKYU என்ற சென் குரு சிறுவயதிலேயே மிகக் கூர்மையான அறிவைக் கொண்டிருந்தார். மற்றொரு சென் குருவிடம் அவர் பயிற்சிபெற்று வந்தார். ஒரு நாள் தன் குருவிடம் இருந்த ஒரு பழமையான தேநீர் கோப்பையை உடைத்து விட்டார். இதைத் தன் குருவிடம் எப்படி கூறுவதென்று அவர் தடுமாறிக்கொண்டிருந்த போது குரு அவ்வழியே வந்தார். Ikkyu தனக்குப் பின்புறமாய் உடைந்த கோப்பையின் துண்டுகளை வைத்துக் கொண்டு குருவிடம் "குருவே மக்கள் ஏன் இறக்கின்றனர்?" என்று கேட்டார். வயதான அந்த குரு "இயற்கையின் நியதி அது. ஒவ்வொன்றுக்கும் குறிக்கப்பட்டுள்ள நேரம் வந்ததும் எல்லாமே இறக்க வேண்டியது தான்." என்றார். உடனே Ikkyu தான் வைத்திருந்த உடைந்த கோப்பையை குருவுக்கு முன் நீட்டி "உங்கள் கோப்பை இறக்கும் நேரம் வந்து விட்டது." என்றார்.

(சங்கத் திருவுரை ஆகமம்) அல்லது சபை உரையாளர் நூலின் 3ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள முதல் 10 திருவசனங்களை இன்று முடிந்தால் தியானிக்கவும். அந்தப் பகுதியின் ஆரம்ப வரிகள் இவை: ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு.



சபை உரையாளர் நூல் (சங்கத் திருவுரை ஆகமம்) 3 1-8
ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்: நடவுக்கு ஒரு காலம், அறுவடைக்கு ஒரு காலம்: கொல்லுதலுக்கு ஒரு காலம், குணப்படுத்தலுக்கு ஒரு காலம்: இடித்தலுக்கு ஒரு காலம், கட்டுதலுக்கு ஒரு காலம்: அழுகைக்கு ஒரு காலம், சிரிப்புக்கு ஒரு காலம்: துயரப்படுதலுக்கு ஒரு காலம், துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்: கற்களை எறிய ஒரு காலம், கற்களைச் சேர்க்க ஒரு காலம்: அரவணைக்க ஒரு காலம், அரவணையாதிருக்க ஒரு காலம்: தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம், இழப்பதற்கு ஒரு காலம்: காக்க ஒரு காலம், தூக்கியெறிய ஒரு காலம்: கிழிப்பதற்கு ஒரு காலம், தைப்பதற்கு ஒரு காலம்: பேசுவதற்கு ஒரு காலம், பேசாதிருப்பதற்கு ஒரு காலம்: அன்புக்கு ஒரு காலம், வெறுப்புக்கு ஒரு காலம்: போருக்கு ஒரு காலம், அமைதிக்கு ஒரு காலம்.







All the contents on this site are copyrighted ©.