2010-02-09 16:04:49

கேரளக் கிறிஸ்தவசபைத் தலைவர்களுடன் இந்துமதக் குழு ஒன்றின் தலைவர் நல்லுறவு


பிப்.09,2010 கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுடனான உறவை மேம்படுத்தும் விதமாக இந்துமதக் குழு ஒன்றின் தலைவர் கேரளாவின் மூன்று கிறிஸ்தவசபைத் தலைவர்களுக்கு ஒலிவக் கிளையைக் கொடுத்து தனது ஆவலைத் தெரிவித்துள்ளார்.
இந்த அடையாள நடவடிக்கை குறித்து நிருபர்களிடம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ், கிறிஸ்தவசபைகளின் தலைவர்களுக்கும் இந்துமதப் பிரதிநிதிகளுக்குமிடையே இடம் பெற்ற உரையாடல் பயனுள்ளதாக இருந்தது என்று கூறினார்.
சிறுபான்மை மதக் குழுக்கள் மத்தியில் தமது அமைப்பின் மீது அச்சம் இருப்பதாகவும் தெரிவித்த மாதவ், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற எண்ணம் உருவாகுவதற்குச் சில அரசியல் கட்சிகள் காரணம் என்று குறை கூறினார்.
இதில் உண்மை இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் மீதான பயத்தை அகற்றி நல்லதோர் உரையாடல் இடம் பெறத் தாங்கள் விரும்புவதாகவும் மாதவ் கூறினார்.
இம்மாதம் 24ம் தேதியன்று கொல்லத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு கேரளத் திருச்சபைத் தலைவர்கள் தன்னை அழைத்திருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.