2010-02-08 16:33:53

ஹெயிட்டியின் அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் - அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர் பேரவை வலியுறுத்தல்


பிப்.08,2010 ஹெயிட்டியின் நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்துள்ள அனாதைக் குழந்தைகளை அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளவர்கள் தத்தெடுக்க முன் வந்திருக்கும் இந்த நேரத்தில் அப்படி தத்தெடுக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டுமென அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர் பேரவை அந்நாட்டின் அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஹெயிட்டியில் பணிபுரியும் ஒரு தன்னார்வ குழுவினர் அண்மையில் 10 குழந்தைகளை அந்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது இக்கடிதத்திற்கு ஒரு பின்னணி என்று ஊடகங்கள் கூறுகின்றன.

அனாதையாக்கப்பட்டக் குழந்தைகள் அவர்களது உறவினர்கள் மத்தியில் தங்கள் எதிர் காலத்தை உருவாக்க முடிந்தவரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அம்முயற்சிகள் சரியான தீர்வுகளைத் தராத போது, இக்குழந்தைகள் பிற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் முயற்சிகள் குழந்தைகள் நலனில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஆயர்களின் இக்கடிதம் வலியுறுத்துகிறது








All the contents on this site are copyrighted ©.