2010-02-08 16:29:11

மனித வாழ்வு தாயின் கருவறை முதல் அவன் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாக்கப்பட வேண்டும் - திருத்தந்தை


பிப்08,2010 மூவேளை செபத்திற்குப் பின்னர் விசுவாசிகளை பலமொழிகளில் வாழ்த்திய திருத்தந்தை, இத்தாலியில் ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட வாழ்வு தினம் பற்றிப் பேசினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி வறுமையையும் பெரும் சமூக சமத்துவமற்றதன்மைகளையும் உருவாக்கியிருப்பதாகவும். இது வாழ்வை வெகுவாய்ப் பாதிப்பதாகவும் மிகவும் நலிந்தவர்களை அதிகம் பாதிப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

எனவே இந்தச் சூழலானது, வறுமையை அகற்றுவதற்கும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நம்மை அர்ப்பணிக்கத் தூண்டுகிறது, மனிதனின் இலக்கு அவனது நல்வாழ்வு அல்ல, மாறாக கடவுள் என்பதை நினைக்க வைக்கின்றது, மனித வாழ்வு தாயின் கருவறை முதல் அவன் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாக்கப்பட வேண்டும், எவரும் தனது சொந்த வாழ்வுக்கு எஜமான் அல்ல, நாம் அனைவரும் வாழ்வைக் காப்பாற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்றார் திருத்தந்தை. புனித லூர்து அன்னை விழாவான பிப்ரவரி 11ம் தேதி உலக நோயாளர் தினம், அன்று நோயாளிகளுக்கென புனித பேதுரு பசிலிக்காவில் தான் திருப்பலி நிறைவேற்ற இருப்பதாகவும் அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்








All the contents on this site are copyrighted ©.