2010-02-08 16:38:43

நாளும் ஒரு நல்லெண்ணம்


பிப்.08,2010 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கடமை ஒளிந்திருக்கிறது. அந்தக் கடமையைக் கண்டறிந்த மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த மனிதருள், மார்ட்டின் லூத்தர் கிங், ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, அன்னை தெரேசா, நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூ கி எனச் சிலர் வரிசையில் நிற்கின்றனர். 1945ம் ஆண்டு பிறந்த சூ கி, மியான்மாரில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வருபவர். கடந்த இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள், மியான்மார் இராணுவ ஆட்சியினால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஆங் சான், அன்றைய பிரித்தானிய ஆட்சியில் பிரதம அமைச்சராக இருந்தவர். இவர் 1947 இல் படுகொலை செய்யப்பட்டார். பல விருதுகளைப் பெற்றுள்ள ஆங் சான் சூ கி, 1991 ல் நொபெல் அமைதி விருதையும், 1992 இல் சர்வதேச புரிந்து கொள்ளுதலுக்கான இந்திய அரசின் ஜவஹர்லால் நேரு விருதையும் பெற்றிருப்பவர். மியான்மாரில் மக்களாட்சிக்கும் மனித உரிமைகளுக்குமான போராட்டம் வாழ்வுக்கும் மாண்புக்குமான போராட்டம் என்று சொன்னவர் சூ கி.
ஆம். தன் கடமையைக் கண்டறிந்த மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.







All the contents on this site are copyrighted ©.