2010-02-06 15:29:08

மனித மாண்பும் மனித உரிமைகளும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என கந்தமால் கிறிஸ்தவர்கள் வேண்டுகோள்


பிப்.06,2010 மனித மாண்பும் மனித உரிமைகளும் முழுமையாக மதிக்கப்பட வேண்டும், வேலையும் குடியிருக்க வீடும் வேண்டும், சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று பிள்ளைகள் படிப்பை மீண்டும் தொடங்க வேண்டும் ஆகிய விண்ணப்பங்களை, ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைத்துள்ளனர்.

கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையால் பாதிக்கப்பட்ட கந்தமால் மாவட்டத்தைப் பார்வையிட்டு வரும் EU என்ற ஐரோப்பிய சமுதாய அவைப் பிரதிநிதிகளிடம் இவ்வாறு அம்மக்கள் கேட்டுள்ளனர்.

இந்த ஐரோப்பிய சமுதாய அவைப் பிரதிநிதிகள் முகாம்களையும் வன்முறையால் சேதமடைந்துள்ள இடங்களையும் பார்வையிட்டு வருகின்றனர்.

ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறையில் 5347 வீடுகள் அழிக்கப்பட்டன, 75 பேர் இறந்தனர் மற்றும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக புலம் பெயர்ந்தனர்.








All the contents on this site are copyrighted ©.