2010-02-05 16:32:17

அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் : அணுஆயுத அச்சுறுத்தல் இல்லாத வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு கவனமும் தைரியமும் நிறைந்த பாதையைத் தெரிவு செய்ய அழைப்பு


பிப்.05,2010 உலகில் அணுஆயுதங்களை ஒழிப்பதற்கான பாதை நீண்டதாகவும் பொறுப்பற்றதாகவும் இருக்கின்றது என்பதால், அணுஆயுத அச்சுறுத்தல் இல்லாத வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு கவனமும் தைரியமும் நிறைந்த பாதையைத் தெரிவு செய்யுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு பேராயர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

“உலகை அணுஆயுதமற்ற இடமாக மாற்றுவது” குறித்து பாரிசில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட இருநூறுக்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தலைவர்களுக்கு உரையாற்றிய பால்ட்டிமோர் பேராயர் எட்வின் ஒபிரைய்ன் (Edwin O'Brien) இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

ஒவ்வோர் அணுஆயுத அமைப்பும் அனைத்து அணுஆயுதங்கள் கொள்கையும் மனித வாழ்வையும் மனித மாண்பையும் பாதுகாப்பதை தனது இறுதி இலக்காகக் கொண்டிருக்க வேண்டுமென்றும் பேராயர் வலியுறுத்தினார்.

அணுப் போரில் வெற்றியாளர்கள் யாரும் கிடையாது, பலியாகுகின்றவர்களே உள்ளனர் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டின் உலக அமைதி தினச் செய்தியில் குறிப்பிட்டதையும் பால்ட்டிமோர் பேராயர் சுட்டிக் காட்டினார்.

இவ்வியாழனன்று நிறைவடைந்த இந்த மூன்று நாள் சர்வதேச கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டு முன்னாள் செயலர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ் (George Schultz), ஜோர்டன் அரசி நூர் (Noor) உட்பட பல தலைவர்கள் உரையாற்றினர்.








All the contents on this site are copyrighted ©.