2010-02-04 15:05:53

லாஹூரில்  ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்களின் கண்டன ஊர்வலம்


பிப்.04,2010 கடந்த சனவரி பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு சித்ரவதைகள் செய்யப்பட்டு, இறுதியில் கொல்லப்பட்ட 12 வயது கத்தோலிக்க சிறுமி ஷாஜியா ஷஹீனின் (Shazia Shaheen) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லாகூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அவையின் முன்னாள் தலைவர் Naeem Chaudhryஐ பாதுகாக்க வழக்கறிஞர்கள் எடுத்துவரும் முயற்சிகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் இப்புதனன்று லாஹூரில் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
லாகூர் உயர்மறைமாவட்ட துணை ஆயர் Sebastian Shah, முதன்மை குரு Andrew Nisari உட்பட பல குருக்கள் இந்த கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மக்களைக் காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞர்கள் குற்றவாளியோடு துணைபோகும் இந்தப் போக்கைக் கண்டு மிகுந்த ஏமாற்றமாக உள்ளதென துணை ஆயர் Shah கூறினார்.
கொலை செய்யப்பட்ட Shaheen ன் குடும்பத்திற்கு வழக்கறிஞர்கள் விடுத்த மிரட்டல்களைத் தொடர்ந்து, அச்சிறுமியின் தந்தை காவலர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் சமுதாயத்தில் பரவி வரும் நன்னெறியற்ற போக்கு திருச்சபைக்குப் பெரிதும் கவலையைத் தருகிறதென கராச்சி மறைமாவட்ட முதன்மை குரு Arthur Charles செய்தியாளர்களிடம் கூறினார். 







All the contents on this site are copyrighted ©.