2010-02-04 15:03:01

நாளும் ஒரு நல்லெண்ணம்


பிப்.05,2010 RealAudioMP3 சர்வதேச நிபுணர் குழு ஒன்று, மனநலம் பேணுவது எப்படி என்பது பற்றிய தனது ஆய்வின் முடிவுகளை இவ்வியாழனன்று விவரித்துள்ளது. எளிமையான பயிற்சிகள் இதற்கு உதவும். டிமென்ஷியா எனப்படும் மூளைக்கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு எளிய உடற்பயிற்சிகளால் இருபது சதவீதம் குறைகிறது. உடற் பருமன், இரத்த அழுத்தம், இரத்தக் கொழுப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எந்த வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினாலும் அதனால் பலருக்கு டிமென்ஷியா மனநோய் வரும் வாய்ப்பு குறைகிறது என இக்குழு கூறியுள்ளது. நம்பிக்கை கொண்டு நடந்தால் நல்லதே நடக்கும்.








All the contents on this site are copyrighted ©.