2010-02-03 15:23:56

உருது மொழியில் விவிலியத்தை இணையதளத்தில் கேட்கும் வசதி


பிப்.03,2010 உருது மொழியில் விவிலியத்தை இணையதளத்தில் கேட்கும் வசதியை உலகிலேயே முதன் முதலாக செய்து வருகிறார் Riaz Masih Gill என்ற கத்தோலிக்கர். 31 வயதான திரு கில், கணினி மென்பொருள் நிபுணர் என்றும் இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் குரானை இணையதளத்தில் நிறுவும் பணியில் ஈடுபட்ட போது இதன் நுணுக்கங்களை அறிந்து அதை தற்போது விவிலியத்திற்கு பயன்படுத்துவதாகக் கூறினார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. கேட்கும் வசதியுடன் உருது விவிலியத்தை இணையதளத்தில் நிறுவ திரு கில் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி உலகிலேயே முதல் முறை என்று பாகிஸ்தான் விவிலியக் கழகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பல கத்தோலிக்கர்கள் உருது மொழியை எழுத, படிக்கத் தெரியாதவர்கள் ஆதலால், விவிலியத்தைக் கேட்பதற்கு உதவியாக திரு கில் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால் கத்தோலிக்கர்கள் பெரிதும் பயன் பெறுவர் என்று திரு கில்லின் பங்குத் தந்தை Nasir Javed கூறினார். விவிலியத்தை இணையதளத்தில் கேட்கும் வசதியோடு நிறுவப்பட்டுள்ள இந்த முயற்சி 70 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.