2010-02-01 16:01:18

வளர்ச்சித் திட்டங்களில் இலங்கையின் வடகிழக்கு தமிழர் பகுதிகள் விடுபட்டு விடக்கூடாது - புத்த மத உயர்குரு, Human Rights Watch


பிப்.01,2010 அண்மைய தேர்தலுக்குப் பின்னான வளர்ச்சித் திட்டங்களில் இலங்கையின் வடகிழக்கு தமிழர் பகுதிகள் விடுபட்டு விடக்கூடாது என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டின் முக்கிய புத்தமதத் துறவிகளுள் ஒருவர்.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளங்கள் வெட்டுவது, நீர் ஆதாரங்களை உருவாக்குவது என வளர்ச்சித் திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்ற புத்த மதத் துறவி வணக்கத்துக்குரிய Budhdharakkitha Thera, இலங்கையின் அனைத்துப் பகுதி மக்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மேலும், இலங்கையின் அனைத்து சமூகத்தினரும் மாண்புடனும் இணக்கத்துடனும் வாழத் தேவையான, நீடித்த அமைதியை உருவாக்குவதற்கான நேரம் இது என்றார் புத்த மத உயர்குரு வணக்கத்துக்குரிய Thibbatuwawe Sri Siddhartha Sumangala Thera. இதற்கிடையே, அதிபர் ராஜபக்ஷா தன் தற்போதைய ஆட்சியின் போது, ஏற்கனவே நடந்ததுபோல் சிங்கள தேசிய கொள்கைகளுடன் செயல்படுவதற்கோ, தமிழ் மக்களின் 26 ஆண்டு உள்நாட்டுப் போருக்குக் காரணமான குறைபாடுகளைக் களைவதற்கோ முனையலாம் என கருத்து வெளியிட்டுள்ளார் Human Rights Watchன் சட்ட மற்றும் கொள்கை இயக்குனர் James Ross.







All the contents on this site are copyrighted ©.