2010-02-01 14:45:05

மத வன்முறைகள் இடம்பெற்ற கந்தமால் மாவட்டத்தை நேரில் சென்று பார்வையிடுகிறது ஐரோப்பிய ஐக்கிய அவையின் குழு.


பிப்ரவரி 01. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்ற ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தை நேரில் சென்று பார்வையிடும் பயணத்தை இச்செவ்வாய் முதல் துவக்குகிறது ஐரோப்பிய ஐக்கிய அவையின் குழு.

இச்செவ்வாய் முதல் வெள்ளி வரை, உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டுள்ள 12 பேர் கொண்ட இந்த ஐரோப்பியக் குழு, வன்முறைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து அதனை அறிக்கையாக வெளியிடவோ, பத்திரிகைத் துறையிடம் இது குறித்துப் பேசவோ அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார் கட்டாக்-புபனேஸ்வர் பெருமறை மாவட்ட குரு அஜய் சிங்.

கடந்த வாரம் தன் பயணத்தை துவக்கவிருந்த இக்குழு, ஒரிசா தலைநகரை மட்டுமே சந்திக்கவேண்டும் என மாநில அரசு கட்டளை பிறப்பித்ததால், தன் பயணத்தை தள்ளி வைத்தது. தற்போது மத்திய அரசின் தலையீட்டின் பேரிலேயே, கிராமங்களை சந்திக்க இக்குழுவுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கலாம் என்றார் குரு சிங்.








All the contents on this site are copyrighted ©.