2010-02-01 08:43:22

நாளும் ஒரு நல்லெண்ணம்


பிப்.01,2010 RealAudioMP3 சாமுவேல் இரண்டாம் புத்தகம், 16ம் அதிகாரத்தில் சிமயி என்பவன் மன்னன் தாவீதைப் பழித்துரைத்த நிகழ்வு ஒன்றை வாசிக்கிறோம். சிமயி சவுலின் குடும்பத்தையும் வீட்டையும் சார்ந்தவன். மன்னன் தாவீது, அரசர் சவுலுக்குப் பின்னர் இஸ்ரயேலின் அரசனானவர். ஒருசமயம் சிமயி, தாவீதை எதிர்கொண்ட போது தாவீது மீதும் அவரைச் சார்ந்த பணியாளர், அவர்தம் வலமும் இடமும் இருந்த வீரர்கள் என அனைவர் மீதும் கல்லெறிந்தான். இரத்த வெறியனே, பரத்தை மகனே, நீ சிந்திய சவுல் வீட்டார் அனைவரின் இரத்தப்பழி அனைத்தையும் ஆண்டவர் உன்மீது வரச்செய்தார் எனப் பழித்துக் கூறினான், ஆனால் தாவீது அவனை எதுவுமே செய்யவில்லை. அந்தப் பழித்துரைச் சொற்களிலும் இறைவனது விருப்பம் என்னவென அறிய முற்படுகிறார் தாவீது. சிமயியில் இருந்தக் குடும்பப் பாசமும் குல உணர்வும், மெய் எது, பொய் எது எனக் காண முடியாமல் செய்து விட்டன. ஆம். உணர்ச்சிவசப்படும் பொழுது சிந்தனைகள் நிதானத்தை இழக்கின்றன. சுடும், கடும் சொற்கள் அடுத்தவரை எளிதில் காயப்படுத்தி விடுகின்றன. எனவே உணர்ச்சி வயப்பட்டு உண்மையை உதறிவிடாதே.








All the contents on this site are copyrighted ©.