2010-02-01 16:00:58

இன்றைய பன்வலைத் தளங்கள் மூலம் இறைவனுடனான சந்திப்பு – குரு Federico Lombardi


பிப்.01,2010 இன்றைய அசாதாரண தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளால் நிறைந்திருக்கும் சமூகத் தொடர்பு துறைக்குள் நுழையும் ஒவ்வொரு விசுவாசியும் தொழில் நுட்பம் எனும் வழிமுறைகளுக்குள் தன்னை இழக்காமல், இறைவனுடனான சந்திப்பு என்ற நோக்கத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார் திருப்பீடப்  பேச்சாளர் இயேசு சபை குரு, Federico Lombardi.
திருத்தந்தையின் 44வது உலக சமூகத்தொடர்பு தினத்திற்கான செய்தி குறித்து வத்திக்கான் தொலைகாட்சியில் 'Octava Dies ' என்ற வாராந்திர நிகழ்ச்சியில் கருத்து வழங்கிய திருப்பீடப் பேச்சாளர், இன்றைய பன்வலைத் தளங்கள் மூலம் இயலக்கூடியதாய் இருக்கும் பகிர்தல், நட்புணர்வு மற்றும் பேச்சுவார்த்தைகள் எனும் உறவுக் கொண்டாட்டங்களின் இறுதி அர்த்தமாக கடவுளே உள்ளார் எனக் கூறினார்.இன்றைய பன்வலைத் தளங்களின் நல்ல மற்றும் தீய பக்கங்களையும் சுட்டிக் காட்டிய குரு Lombardi இறைவனின் இருப்பு மற்றும் அனைவருக்குமான இறை அன்பின் அடையாளங்களை எடுத்துரைக்கும் வழிகளைக் கண்டு கொள்ளமுடியும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.