2010-01-30 15:05:33

ஈராக்கில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது- அந்நாட்டுப் பேராயர் நோனா


சன.30,2010 ஈராக்கில் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கக் கூடாது என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடஈராக்கிலுள்ள மொசூலின் புதிய பேராயராகத் திருநிலைபடுத்தப்பட்டுள்ள பேராயர் அமில் ஷாமோன் நோனா, மொசூல் கிறிஸ்தவர்க்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுப்பதே தனது பணியின் நோக்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மொசூலில் 2003ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் தொடங்கிய பின்னர் தற்சமயம் அங்கு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பகுதி குறைந்துள்ளதாகவும் பேராயர் நோனா தெரிவித்தார்.

பேராயர் பவுலோஸ் ஃபராஜ் ராஹோ, ஏறத்தாழ ஈராண்டுகளுக்கு முன்னர் மொசூல் பேராலயத்திற்கு வெளியே கடத்தப்பட்டு, பின்னர் பத்து நாட்கள் கழித்து பிணையலில் இறந்ததை முன்னிட்டு மொசூல் உயர்மறைமாவட்டம் ஆயரின்றி காலியாக இருந்தது. தற்சமயம் அதன் புதிய பேராயராகப் பொறுப்பேற்றுள்ளார் 42 வயதாகும் பேராயர் நோனா. இதன்மூலம் உலகின் இளம் பேராயராகவும் இவர் இருக்கிறார்







All the contents on this site are copyrighted ©.