2010-01-29 15:28:24

சர்வதேச சமுதாயம் எல்லா நிலைகளிலும் வேலை வாய்ப்புக்களை உடனடியாக உருவாக்குமாறு ILO அழைப்பு


சன.29,2010 2009ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக சுமார் 21 கோடியே 20 இலட்சம் பேர் வேலையிழந்தவேளை, சர்வதேச சமுதாயம் எல்லாப் பொருளாதார நிலைகளிலும் வேலை வாய்ப்புக்களை உடனடியாக உருவாக்குமாறு ILO என்ற உலக தொழில் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டு தாவோசில் தொடங்கியுள்ள உலக பொருளாதார கருத்தரங்கையொட்டி அறிக்கை வெளியிட்ட ILO நிறுவனப் பொது இயக்குனர் ஹூவான் சொமாவியா, வேலைவாய்ப்பின்மையைத் தீர்த்து வைப்பதற்கு அரசியல் ரீதியாக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொது மற்றும் தனிப்பட்ட முதலீடுகளை ஒன்றிணைக்கும் பொதுவான கொள்கைகள் வழியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சொமாவியா வலியுறுத்தியுள்ளார்.

உலகில் வேலைவாய்ப்பின்மை 2010ம் ஆண்டிலும் தொடரக்கூடும் என்றும் எச்சரித்துள்ள அவர், இதில் இளையோரே அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 4 கோடியே 50 இலட்சம் பேர் புதிதாக வேலை தேடுகின்றனர் என்றும் ILO நிறுவன அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.