2010-01-29 12:12:58

சனவரி 30. நாளும் ஒரு நல்லெண்ணம்


14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது குற்றம் என சட்டம் கூறினாலும் பல இடங்களில் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. உலக அளவில் 16 கோடிக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு. "கல்வியே குழந்தை தொழிலாளர் முறைக்கு தீர்வு' என்பது உணரப்படவேண்டும். ஒரு குழந்தைக்கு முறையாக அடிப்படை கல்வி கிடைக்காவிட்டால் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகிறது. குழந்தை தொழிலாளர்கள் உருவாக வறுமை தான் முக்கிய காரணம். 2015ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் என ஐ.நா. இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாகவே ஒழித்து விட முடியும் என நம்பப்படுகிறது.

- இலவசமான கட்டாயக்கல்வி

- குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டங்களை சர்வதேச அளவில் எல்லா நாடுகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது

- வறுமையை எதிர்கொள்ள வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது

என்பவை அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்.

தனிநபர் மற்றும் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கும், குழந்தை தொழிலாளர் முறையால் இழப்பு என்பதை பின்தங்கிய நாடுகளும் உணரத்தொடங்கியுள்ளது நல்லதொரு முன்னேற்றம்.








All the contents on this site are copyrighted ©.