2010-01-29 15:24:38

ஒவ்வொரு மாதத்தின் 12ம் தேதியன்று ஹெய்ட்டி நாட்டிற்காகச் செபிக்குமாறு தெய்ஸே குழு கேட்டுக் கொண்டுள்ளது


சன.29,2010 உலகினர் அனைவரும் ஆண்டின் ஒவ்வொரு மாதத்தின் 12ம் தேதியன்று ஹெய்ட்டி நாட்டிற்காகச் செபிக்குமாறு தெய்ஸே கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

ஹெய்ட்டியில் பேரழிவை ஏற்படுத்திய கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட 12ம் தேதியை எப்பொழுதும் நினைவுகூரும் விதமாக, அந்நாட்டு இளையோரின் விண்ணப்பத்தின் பேரில், பிரான்சை மையமாகக் கொண்டுள்ள இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே, ஹெய்ட்டியில் குற்றக்கும்பல்கள், தற்காலிக முகாம்களில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி மாரியோ ஆந்த்ரேசோல் தெரிவித்தார்.

ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த மாலைவேளையில், அந்நாட்டு தேசிய சிறையிலிருந்து ஏழாயிரத்துக்கு அதிகமான கைதிகள்

தப்பித்து விட்டதாகவும் மாரியோ கூறினார்.








All the contents on this site are copyrighted ©.