2010-01-28 16:05:16

ஹெய்ட்டி குறித்து பேராயர் தொமாசி ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் உரை


சன.28,2010 நிலநடுக்கத்தால் பேரழிவுக்குள்ளான ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான கட்டுமானப் பணிகள் அடிப்படை மனித உரிமைகளான உணவுக்கும் குடிநீருக்கும் நலஆதரவுக்கும் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புகளுக்குமான உரிமைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் சில்வானோ தொமாசி.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா.அமைப்புகளுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி, இவ்வியாழனன்று ஹெய்ட்டி நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு விண்ணப்பித்தார்.

ஹெய்ட்டிக்கென கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஏற்கனவே மூன்று கோடியே முப்பது இலட்சம் டாலரைத் திரட்டியுள்ளதையும், சி.ஆர்.எஸ் எனும் கத்தோலிக்க துயர்துடைப்பு அமைப்பு 26 கோடியே 50 இலட்சம் டாலரை வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டிய பேராயர் சில்வானோ தொமாசி, ஹெய்ட்டி நாட்டை மீண்டும் கட்டி எழுப்புவதில் திருச்சபை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என உறுதி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.