2010-01-28 16:11:19

நாளும் ஒரு நல்லெண்ணம்


சன.29,2010 RealAudioMP3 ஒருசமயம் இயேசு கெரசேனர் பகுதியில் பேய்பிடித்த ஒரு மனநோயாளியைக் குணமாக்கினார். அந்த நிகழ்வில் இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கியது. எனவே அதைக் கண்ட மக்கள், அந்த மனிதன் நலமானதில் மகிழ்ச்சி அடைந்து இயேசுவைத் தங்கள் பகுதியில் வரவேற்பதற்குப் பதிலாக அவரை ஊரைவிட்டே போகச் சொன்னதாக மாற்கு நற்செய்தி அதிகாரம் 5, வசனம் 17 ல் வாசிக்கிறோம். மனிதரைவிட உடமைகளுக்கு அதிம் முக்கியத்துவம் கொடுப்போரின் ஊரில், இல்லத்தில் மனநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். எனவே மனிதர்களை முழுமையாக்க முயல்வோம். இந்த முயற்சியில் பொருட்களை இழந்தால் அவை பெரும் இழப்பல்ல. மனிதர்களை இழப்பதே பெரும் இழப்பு. இழந்தவர்களை மீட்க வந்த இறைமகன் தரம் பாடத்தை இன்றே கற்றுக் கொள்வது நல்லதுதானே







All the contents on this site are copyrighted ©.