2010-01-28 16:02:41

உரோம் பாப்பிறை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு


சன.28,2010 திருச்சபையின் பெரும் மறைவல்லுனரான புனித தாமஸ் அக்குய்னாசின் விழாவான இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் கல்வி நிறுவனங்களின் நோக்கம் மற்றும் அவற்றின் சிறப்பான பணிகள் குறித்த சிந்தனைகளை வழங்கவிரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோமையிலுள்ள பாப்பிறை பல்கலைக்கழகங்களின் ஏறத்தாழ 350 பேரை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பயனுள்ள உரையாடல்களும் பல்வேறு விவகாரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கும் கருத்தாழமிக்க ஆய்வும் படிப்பும் தேவைப்படுகின்றன என்றும் எடுத்துச் சொன்னார்.

இன்றைய நவீன கலாச்சாரம், அகநிலை வாய்மைக் கோட்பாட்டில் அதிகமானத் தாக்கத்தைக் கொண்டிருப்பதால் இக்காலத்திய ஆராய்ச்சிகள் மற்றும் படிப்பின் தன்மையை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளதெனக் கூறினார் திருத்தந்தை.

மேற்கோள்கள் காட்டுவதற்கான அறநெறி சார்ந்த மற்றும் பிறகருத்துக் கோட்பாடுகள் குறைவுபடுவது சாதாரண வாழ்வை, குறிப்பாக இளைய தலைமுறைகளுக்கானப் பயிற்சியையும் பாதிக்கின்றன என்பதையும் குறிப்பிட்டுப் பேசிய அவர், மதிப்பீடுகள், உண்மை, வாழ்வு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இளையோருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இந்த சர்வதேச குருக்கள் ஆண்டில் திருநிலைபடுத்தப்பட்ட குருக்களுக்கு இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.