2010-01-28 16:09:30

இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி


சன.28,2010 இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 30ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படுகின்றது. அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி இறந்த தினமான ஜனவரி 30ம் தேதி காலை 11 மணிக்கு, நாடு முழுவதும் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தமிழக மக்களும், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று தலைமைச் செயலர் ஸ்ரீபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூரும் வகையில் 30ம் தேதி காலை 11 மணியில் இருந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படும். அந்நேரத்தில், நாடு முழுவதும் உள்ள அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பணிகள் நிறுத்தப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்படும். தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களில் பணி புரிபவர்களுக்கு ஏதுவாக, வசதியுள்ள இடங்களில் அந்நேரத்தை உணர்த்திட சங்கொலி, மணியொலி எழுப்பப்படும். அப்போது, ஆங்காங்கே நின்று இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்க வேண்டும். வரும் 30ம் தேதி விடுமுறை நாளில் வருவதால், 29ம் தேதி காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணி வகுப்பு மைதானத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் செய்து வைப்பார். இதில், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொள்வர் என்று ஸ்ரீபதி கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.