2010-01-27 15:29:34

ஹெயிட்டியின் மேல் சுமத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களை இரத்துச் செய்யும் படி World Concil of Churches வேண்டுகோள்


சன.27,2010 ஹெயிட்டியின் பயங்கர நிலநடுக்கத்தின் விளைவுகளிலிருந்து மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்நாட்டின் மேல் சுமத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களை இரத்துச் செய்யும் படி, World Concil of Churches அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கடன் தொகைகளை இரத்து செய்வது இந்நாட்டு மக்களுக்கு உதவும் முதல் படி என்றும், இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பலவகைகளிலும் உதவ அனைத்துலகமும் ஒன்று சேர வேண்டுமெனவும் இக்குழுவின் செயலர் Rev Dr Olav Fykse Tveit கூறியுள்ளார். இவ்வாரம் சுவிட்சர்லாந்தின் Davosல் நடைபெறும் உலகப் பொருளாதார கருத்தரங்கில் தான் கலந்து கொள்ளும் போது இச்சிறப்புக் கோரிக்கையை அக்கருத்தரங்கிலும் முன்வைக்கப் போவதாக முனைவர் Tveit கூறினார். பூமி கோளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நாடுகளிலேயே மிகவும் ஏழையான ஹெயிட்டியின் கடன் தொகையில் 120 கோடி டாலர்கள் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது எனினும், அந்நாடு இன்னும் 64 கோடி டாலர்களை உலகத்தின் பல நிதி நிறுவனங்களுக்கு வழங்கக் கடன்பட்டுள்ளதென செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.