2010-01-27 15:30:34

திரிபுரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ‘Yarwng’ திரைப்படத்திற்கு தேசிய  விருது


சன.27,2010 இந்தியாவின் 56வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டபோது, திரிபுரா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ‘யார்வங்’ (Yarwng) என்ற திரைப்படம் சிறப்பு விருதுக்கெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருந்து தேசிய விருது பெறும் முதல் திரைப்படம் என்ற பெருமைக்குரியது ‘யார்வங்’ (Yarwng). இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை பல்வேறு அனைத்துலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, புகழ் அடைந்துள்ளது. வேர்கள் என்று பொருள்படும் ‘யார்வங்’ (Yarwng), Gumtiயில் கட்டப்படும் அணையால், புலம் பெயர்க்கப்பட்ட மக்களை மையப்படுத்திய திரைப்படம் என்றும், இந்தத் திரைப்படத்தை திரிபுரா பகுதியில் பணிபுரியும் Fr Joseph Kizhakechennadu, Fr Joseph Pulinthanath என்ற இரு சலேசிய குருக்கள் உருவாக்கினர் என்றும் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. இந்த திரைப்படம் Signis, Missio, சலேசிய சபை ஆகிய நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவியால் உருவாக்கப்பட்டது எனவும், இத்திரைப்படத்திற்கான தேசிய விருதை வருகிற மார்ச் மாதம் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்குவார் என்றும் இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.