2010-01-27 15:20:54

சனவரி 28 - நாளும் ஒரு நல்லெண்ணம் 


கல்வி என்பதை நாம் எப்படி புரிந்து வைத்துள்ளோம்?

கட்டிடத்துக்குள் வாசிப்பதை கல்வியாகவும், கஷ்டத்துக்குள் கற்பதை அனுபவமாகவும் பிரித்து வைத்துள்ளோம்.

வணிகத்திற்கான படிக்கட்டா கல்வி?

பணமுடையோர் கல்வியை வியாபாரமாக்கி, வணிகக் கூடங்களாக்கி, ஆசிரியர்களை விற்பனையாளராக்கிவிட்டார்கள்.

அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை விட, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு

இதுவே காரணம்.

காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பிக்கின்றோம்.

கல்வி என்பது இன்று என்ன? முதுகுச் சுமையும், மனப்பாடமுமா?

கட்டைவிரலை குரு தட்சணையாக தந்த நாட்டில், இன்று ஆசிரியர் மாணவர் உறவு எப்படியுள்ளது?

14 வயது வரை    கட்டாயக்கல்வி என்பது கடைபிடிக்கப்படுகிறதா?

"கற்க கசடறக் கற்பவை, கற்றபின்

நிற்க அதற்குத்  தக" என்ற வள்ளுவ வார்த்தைகள் அர்த்தம் தேடுகின்றன.







All the contents on this site are copyrighted ©.