2010-01-26 13:58:23

பாகிஸ்தானில் கத்தோலிக்கச் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டுப் போராட்டம்.


சன.26,2010 பாகிஸ்தான் நாட்டில் 12 வயது கத்தோலிக்கச் சிறுமி ஒருவர் சித்திரவதைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது குறித்து நீதி கேட்டு அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டமன்றத்தின் முன்னர் கூடி தங்கள் எதிர்ப்பை வெளியிட்ட கிறிஸ்தவர்கள், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் எங்ஙனம் நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்றனர்.

முஸ்லீம் வழக்குரைஞர் நயீம் சவுத்ரியின் வீட்டில் 8 மாதங்களாக பணியாற்றி வந்த சாட்ஸியா சஹீம் என்ற சிறுமி நகங்கள் பிடுங்கப்பட்டு, தாடை எலும்பும் வலது கையும் உடைக்கப்பட்டு 16 வெட்டுக்காயங்களுடனும் முதுகில் சூடு போட்டக் காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கிறிஸ்தவத் தலைவர்கள் நீதி கேட்டு அரசுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, இச்சிறுமியின் உடலைப்பெற மறுத்து, கிறிஸ்தவப் பெண்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, குற்றவாளியான வழக்குரைஞர் கைது செய்யப்பட்டுள்ளது மட்டுமல்ல, பாகிஸ்தான் அரசுத்தலைவர் ஆஸிஃப் அலி சர்தாரி, ஐந்து இலட்ச ரூபாயை அச்சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.