2010-01-26 14:01:21

துன்புறும் கிறிஸ்தவர்களுக்கென ஒரு வலைத்தளம்


சன.26,2010 சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலைகளை வெளி உலகுக்கு வெளிப்படுத்த உதவும் விதமாக கணனி வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது Aid to the Church in Need என்ற அமைப்பு.

'Where God Weeps' அதாவது கடவுள் கண்ணீர் விடும் இடம் என்ற தலைப்பில் இத்தளத்தைத் துவக்கியுள்ள இக்கத்தோலிக்க அமைப்பு, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படும் பகுதிகளில் பணிபுரிவோரின் கருத்துக்கள் இதில் இடம்பெறும் எனவும் அறிவித்துள்ளது.

துன்புறுத்தப்படும் மக்களோடு எங்கனம் பணியாற்றுவது, அவர்களுக்கு எவ்வழிகளில் உதவுவது என்பது குறித்தும் மக்கள் தங்கள் கருத்துக்களை இவ்வலைத்தளம் மூலம் வழங்கலாம் எனக்கூறும் இவ்வமைப்பு, உலகின் இன்றைய 680 கோடி மக்களுள் 70 விழுக்காட்டினர் பெரும் மதக்கட்டுப்பாடுகளையுடைய நாடுகளில் வாழ்வதாகவும், மதக்காரணங்களுக்காக அதிக அளவில் சித்திரவதைகளை அனுபவிப்பது கிறிஸ்தவர்களே எனவும் தெரிவிக்கிறது.








All the contents on this site are copyrighted ©.