2010-01-26 14:49:52

சனவரி, 27 - நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3 துன்பத்தின் பொருள் தேடி மனித குலம் ஆரம்பித்த தேடல் இன்றும் தொடர்கிறது. நாம் தேடிச் செல்லும் இந்த வழிகளில் பாதை காட்டும் அடையாளங்களை பலர் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் வாழ்க்கைப் பாதையில் சந்தித்த உண்மைகள் இவை. நாமும் இவ்வுண்மைகளை நமதாக்க முயல்வோம்.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமைய ஞானி Publilius Syrus சொன்ன பொன்மொழி இது: உடலின் துன்பங்களை விட, மனதின் துன்பங்களே பெரிது. இதையே, நமது வள்ளுவரும் வேறொரு வகையில் சொல்லவில்லையா?
தீயினால் சுட்ட புண் உள்ளாறும். ஆறாதே நாவினால் சுட்ட வடு.
சைக்கிள் போட்டிகளில் உலக வீரனாய் விளங்கிய லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் (Lance Armstrong) சொன்னது இது: "துன்பம் நிரந்தரமல்ல. ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வருடம் இருக்கலாம். அது மறையும், மற்றொன்று அதன் இடத்தை நிரப்பும். ஆனால், துன்பத்திற்கு பயந்து முயற்சியைக் கைவிட்டால், துன்பம் வாழ்நாள் முழுவதும் தங்கி விடும்."         
"குணமாகும் துன்பங்களே வாழ்வில் நாம் பெரும் ஞானம்." இதைச் சொன்னவர் Robert Gary Leeபிறரன்புச் சேவையில் தன்னையே கரைத்துக் கொண்ட மதர் தெரசா சொன்ன பொன்மொழி இது: "நான் கண்டுபிடித்த முரண்பாடு இது. துன்புறும் வரை அன்பு செய்தால், துன்பம் விடைபெறும், அன்பு தங்கும்."







All the contents on this site are copyrighted ©.