2010-01-26 13:51:40

இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - பேராயர் மகிழ்ச்சி


சன.26,2010 இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், சமூக நீதிக்கான அர்ப்பணமும் கத்தோலிக்கர்களிடையே பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் கூறினார் அந்நாட்டுப் பேராயர் வின்சென்ட் நிக்கோலாஸ்.

5 ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அட் லிமினா சந்திப்பையொட்டி திருப்பீடம் வந்திருந்த பேராயர் நிக்கோலாஸ் வத்திக்கான் வானொலிக்கு வழங்கியப் பேட்டியில், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும், கிராமங்களை விட நகர்களில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாசம் ஆழமாக இருப்பதாகவும் அண்மை ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறினார்.

இங்கிலாந்தில் தேவ அழைத்தல்களின் எண்ணிக்கை குறைவாலும், முதியக் குருக்களே அதிகமாக இருப்பதாலும் கிராமப்புறங்களுக்கான மேய்ப்புப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் பேராயர் நிக்கோலாஸ்.

இங்கிலாந்தில் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைக்கும் இடையேயான உறவும் ஒத்துழைப்பும் சுமுகமாக இருப்பதாகவும் கூறினார் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பேராயர் நிக்கோலாஸ்.








All the contents on this site are copyrighted ©.