2010-01-25 09:03:45

சனவரி - 25. நாளும் ஒரு நல்லெண்ணம்..


தமிழகத்தில் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்தியாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்றும் அரசு தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 100 பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் கூறியிருக்கிறார்.
பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் அதே வேளை, மாணவர்களின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளில், அதாவது மாணவர்களின் படிக்கும் ஆர்வம், சிந்தனைத் திறன், படைப்புத் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.
அத்துடன், பள்ளிப் படிப்பு முடிந்து வெளியேறும் மாணவர்கள் ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
கல்வியின் மேன்மையை தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களும் உணர்த்த வேண்டும்.
கல்வி என்பது பள்ளிக்கு மட்டும் உரியதல்ல.
அது வாழ்வு முறையோடுப் பின்னிப் பிணைந்தது.







All the contents on this site are copyrighted ©.