2010-01-25 15:09:39

இன்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிகம் தேவைப்படுவது ஒப்புரவே.


சன. 25.01.10. ஒப்புரவு என்பதே ஆப்ரிக்கக் கண்டத்தின் மக்களிடையே அதிகம் அதிகமாகத் தேவைப்படும் ஒன்றாக இருப்பதாக, ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் அவைக்கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

ஒப்புரவிற்கான தேவையை மக்களிடையே வலியுறுத்துவதே ஆப்ரிக்கத் திருச்சபையின் தொடர் சவாலாக இருப்பதாகவும் இவ்வவை தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்கக் கண்டத்தில் இறையியலானது அரசியலாக மாற்றப்படக்கூடாது, மாறாக உறுதியான மேய்ப்புப் பணி நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என இவ்வவைக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.

பிற மதங்களிடையே, குறிப்பாக இஸ்லாமிய மதத்துடன் நெருங்கிய உறவையும், புரிந்து கொள்ளுதலையும், ஒப்புரவையும் கொணர்வதற்கான முயற்சிகள் குறித்தும் ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் அவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக இறுதி அறிக்கை கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.