சன.25,2010 அன்பர்களே, சனவரி 26 இச்செவ்வாய் அறுபத்தோராவது இந்திய குடியரசு தினம்!. இந்தியா
குடியரசு நாடாகி அறுபது ஆண்டுகள் நிறைவுறும் வைரவிழாவைச் சிறப்பிக்கும் தினம். இந்தியக்கொடியில்
மலர்களைப்பொதித்து வைத்து உயரமான கம்பத்தின் உச்சியில் அதனை கட்டி பின் விழாவின் போது
கொடிக்கயிற்றை இழுத்து பல வண்ணப்பூக்கள் பொழிய பட்டொளி வீசி இந்திய மூவர்ணக்கொடியை பறக்கவிட்டு
அனைவரும் பரவசப்படும் தினம்!. இவ்வேளையில் இந்தியக் குடியரசின் எதிர்காலம் எப்படி இருக்கிறது?
நாட்டின் சவால்கள் என்ன? என்பது பற்றிப் பேசுகிறார் பேராசிரியர் விக்டர் லூயிஸ் அந்துவான்.
சமூகப்பகுப்பாய்வாளரான இவர், சென்னை இலொயோலா கல்லூரியிலுள்ள லீபா என்ற மேலாண்மைக் கல்விக்கான
நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்