2010-01-21 15:13:23

ஹெயிட்டியின் பேராலய இடிபாடுகளிலிருந்து ஐந்து பேரை மீட்டுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு


சன.21,2010 ஹெயிட்டியின் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரம் சென்று, இச்செவ்வாயன்று ஐந்து பேரை இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
 தலை நகரான Port au Princeன் பேராலய இடிபாடுகளிலிருந்து 69 வயதான Anna Zizi என்பவரை முதலில் மீட்டனர். கால் முறிவுடனும், இன்னும் ஒரு சில காயங்களுடனும் மீட்கப்பட்ட Anna, கோவில் இடிந்து விழுந்து அதன் இடிபாடுகளில் தான் சிக்கியிருந்த போது, தொடர்ந்து இறைவனிடம் மட்டும் பேசி வந்ததாகக் கூறினார். இந்த ஐவரையும் மீட்டதைத் தான் ஒரு புதுமையாகவே பார்ப்பதாகவும், இதுவரை தான் மேற்கொண்ட மீட்பு பணிகளிலேயே, இத்தனை நாட்களுக்குப் பின் உயிருடன் மக்களை மீட்டது இதுவே முதல் முறை என்றும் காரித்தாஸ் பணியாளரான Ruth Schoffi கூறியுள்ளார். இதற்கிடையே, இந்த பேராலயத்தின் இடிபாடுகளுக்கிடையே மறைமாவட்டத்தின் முதன்மை குரு Charles Benoitன் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கைகளில் திவ்ய நற்கருணை அடங்கிய சிறுக் குமிழை இறுகப் பற்றிய படி அவரது உடல் இருந்ததாகச் செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.