2010-01-21 15:14:56

ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் நிகழ்ந்த வன்முறைகளை விசாரிக்க அரசு அமைத்த குழு நடத்தும் விசாரணைகளைப் புறக்கணிக்க முடிவு


சன.21,2010 சென்ற ஆண்டு ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை விசாரிக்க அரசு அமைத்த குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளைப் புறக்கணிக்கப் போவதாக இந்த வன்முறையிலிருந்து தப்பித்தவர்கள் கூறியுள்ளனர். இந்த அரசுக் குழு ஏற்கனவே தங்கள் முடிவுகளை எடுத்தபின் விசாரணைகளை மேற்கொள்வதில் அர்த்தமில்லை என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிப்ரா நாயக் (Bipra Nayak) என்பவர் கூறியுள்ளார். இந்த விசாரணைக் குழுவின் தலைவரான Sarat Chandra Mohapatra, விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே, இது மத உணர்வின் அடிப்படையில் எழுந்த கலவரமல்ல என்று கூறியது இந்த விசாரணையின் மேல் தங்கள் நம்பிக்கையைக் குறைத்து விட்டதென கிறிஸ்தவ பழங்குடியினரின் தலைவர்களில் ஒருவரான Praful Pradhan கூறியுள்ளார். ஒரிஸ்ஸாவில் நிகழ்ந்த வன்முறையிலிருந்து தப்பித்தவர்கள் அரசு அமைத்தக் குழுவுக்குத் தங்கள் முடிவை வெளிப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.