2010-01-20 15:42:39

ஹெயிட்டி முழுவதையும் மீண்டும் நீதியின் அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டும் - ஆயர் Pierre Andre Dumas


சன.20,2010 ஹெயிட்டியின் தலைநகரான Port-au-Princeஐ இப்போது அவசர கால நடவடிக்கையில் கட்டிஎழுப்புவது அவசியம் என்றாலும், ஹெயிட்டி முழுவதையும் மீண்டும் நீதியின் அடிப்படையில் கட்டியெழுப்ப இந்த இயற்கைப் பேரழிவின் மூலம் இறைவன் அழைக்கிறார் என ஹெயிட்டி காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Anse-e-Veau மறைமாவட்டத்தின் ஆயருமான Pierre Andre Dumas கூறியுள்ளார். நில நடுக்கம் ஏற்பட்ட போது Port-au-Princeல் தான் இருந்ததை நினைவு கூர்ந்த ஆயர் Dumas ஹெயிட்டியை மீண்டும் கட்டியெழுப்பும் போது, மக்களை மையப்படுத்திய புதிய சமுதாயக் கட்டமைப்புகளைச் சிந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த நில நடுக்கத்தில் அரசுத் தலைவர் மாளிகை, பேராலயம், பேராயர் இல்லம், துறவியர் இல்லங்கள், பள்ளிகள், மக்களின் இல்லங்கள் அனைத்தும் இடிந்ததால் அனைவரும் ஒரே நிலை என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாக இதை ஏற்று இனி நாம் கட்டியெழுப்பும் சமுதாயம் எல்லாரையும் சமமாகக் கண்ணோக்கும் சமுதாயமாக எழுப்பப்படவேண்டுமென ஆயர் Dumas கேட்டுக்கொண்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.