2010-01-20 15:41:58

மத உறவுகளை வளர்ப்பதற்கான திருப்பீடத்தின் பிரதிநிதிகளும் இஸ்ராயேலின் பிரதிநிதிகளும்  இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை


சன.20,2010 யூதர்களுடனான மத உறவுகளை வளர்ப்பதற்கான திருப்பீடத்தின் பிரதிநிதிகளும் கத்தோலிக்கர்களுடன் உறவுகளை வளர்ப்பதற்கான இஸ்ராயேலின் பிரதிநிதிகளும்  இணைந்து கடந்த மூன்று நாட்களாய் வத்திக்கானில் நடத்திய ஒரு கூட்டம் இப்புதனன்று நிறைவுபெற்றுள்ளது. திருப்பீடத்தின் சார்பில் கர்தினால் Jorge Mejiaவும் யூதர்களின் சார்பில் தலைமைக் குரு Shear Yashuvம் இக்கூட்டத்தை முன்னின்று நடத்தியதாகச் செய்திகள் கூறுகின்றன.பொருள் ரீதியான, தொழில் நுட்ப ரீதியான தாறுமாறான பயன்பாடுகளால் மனித குலம் இதுவரைச் சந்தித்திராத ஒரு சுற்றுச்சூழல் நெருக்கடியை இப்போது நாம் சந்தித்து வருகிறோம், இந்த நெருக்கடியைச் சமாளிக்க நாம் இறைவனின் துணியை நாட வேண்டும் என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கூறியுள்ளனர். விவிலியம் மனிதருக்கு தனிப்பட்ட ஒரு ஸ்தானத்தை வழங்கியுள்ளது, ஆயினும் இயற்கையைத்  தவறான வழியில் ஆள்வதற்கு இந்த ஸ்தானத்தை மனிதர்கள் பயன்படுத்துவது ஆபத்து, மாறாக இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொள்ள நமக்கு அளிக்கப்பட்ட இந்த ஸ்தானத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தக் கடமை பட்டிருக்கிறோம் என இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.